மாவட்டத்தில், டாக்டர் உள்பட 35 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 991 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று டாக்டர் உள்பட 35 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 991 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் சென்னை மற்றும் சேலம் மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 956 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 43 வயதான டாக்டர், ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்த 42 வயதான பெண் துணை தாசில்தார் உள்பட 35 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று குமாரபாளையம் மற்றும் ராசிபுரத்தை சேர்ந்த தலா 5 பேர், நாமக்கல்லை சேர்ந்த 3 பேர், ஆண்டகளூர்கேட், பாண்டமங்கலம், குருசாமிபாளையம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், போடிநாயக்கன்பட்டி, மரூர்பட்டி, வையப்பமலை, நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, தோளூர், தண்ணீர்பந்தல்காடு, பெரமாண்டபாளையம், வெடியரசம்பாளையம், ஆலாம்பாளையம் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் மற்றும் சென்னை, ஈரோடு சென்று வந்த 2 பேர் என மொத்தம் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 991 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், பரமத்திவேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story