கூடுவாஞ்சேரி அருகே தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலி


கூடுவாஞ்சேரி அருகே தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2020 1:08 AM IST (Updated: 11 Aug 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலியானார்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுப்புராயலு (வயது 65). இவர் நேற்று டீ கடைக்கு செல்வதற்காக தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது, செங்கல்பட்டு நோக்கி வேகமாக சென்ற தனியார் நிறுவன பஸ் ஒன்று முதியவர் சுப்புராயலு மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story