10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 11 Aug 2020 1:27 AM IST (Updated: 11 Aug 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

காஞ்சீபுரம், 

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகைபதிவை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதங்கள் கணக்கிடப்பட்டது.

அதன்படி, காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 2019-2020 கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட 620 பள்ளிகளில் 10-ம் வகுப்பில் 52 ஆயிரத்து 741 மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். இதில் 26 ஆயிரத்து 701 மாணவர்களும், 26 ஆயிரத்து 40 மாணவிகளும் அடங்குவர். இந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 52 ஆயிரத்து 741 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே காஞ்சீபுரம் மாவட்டத்தில் தான் அதிக 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில், அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story