நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதித்த 13,848 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 5,205 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 205 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 357 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 221 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 484 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 1,793 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை-தென்காசி
நெல்லை மாவட்டத்தில் நேற்று 83 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, அரசு சிகிச்சை மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,400 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2 ஆயிரத்து 180 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதி க்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,964 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,232 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 50 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 5 ஆயிரத்து 205 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story