மாவட்ட செய்திகள்

கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Teen commits suicide by hanging near Kadayam

கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கடையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையம், 

கடையம் அருகே மேட்டூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானபிரவீன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லூர்து அந்தோணி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் லூர்து அந்தோணியின் வயிற்றில் கட்டி இருந்ததால், அவர் தீராத வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் போலீசார் விரைந்து சென்று, தற்கொலை செய்த லூர்து அந்தோணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் பரபரப்பு;கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கடையம் அருகே செங்கல் சூளை அதிபர் கொலையில் மகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்
கடையம் அருகே செங்கல் சூளை அதிபர் கொலையில் மகனை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
3. கடையம் அருகே சொத்து தகராறில் பயங்கரம்: செங்கல்சூளை அதிபர் சரமாரி வெட்டிக்கொலை - மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
கடையம் அருகே சொத்து தகராறில் செங்கல்சூளை அதிபரை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களிடம் 50 பவுன் நகை மோசடி - வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களிடம் 50 பவுன் நகை மோசடி செய்த வங்கி ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கடையம் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் தென்னை மரங்கள் நாசம்
கடையம் அருகே ராமநதி அணைப்பகுதியில் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து 8 தென்னை மரங்களை நாசம் செய்தன.

அதிகம் வாசிக்கப்பட்டவை