வேலூர் மாநகராட்சியில் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம்
வேலூர் மாநகராட்சியில் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் கமிஷனர் சங்கரன் மேற்பார்வையில், 2-மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினர்.
மண்டிதெரு, லாங்குபஜார், பழைய பஸ் நிலையப்பகுதிகளில் கடைகளுக்கு சென்று அவர்கள் வழங்கினர். அப்போது கொரோனா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2-வது மண்டலத்தில் மட்டும் சுமார் ஆயிரம் வணிகர்களுக்கு மேல் இந்த மருந்து பெட்டகம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story