சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாராயணசாமி ஆலோசனை


சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாராயணசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 12 Aug 2020 5:39 AM IST (Updated: 12 Aug 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழா தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

சுதந்திர தின விழாவினை சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா எதிரொலியாக இந்த விழாவில் வழக்கமாக இடம்பெறும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மற்றும் அரசு தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மட்டுமே இடம்பெறுகிறது. இதையொட்டி கடந்த சிலநாட்களாக காவல்துறையினர் உப்பளம் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலோசனை

இந்தநிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் செய்தி, விளம்பரத்துறை செயலாளர் சுந்தரேசன், இயக்குனர் வினயராஜ் ஆகியோருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். அப்போது விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு தொடர்பாகவும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதாவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். 

Next Story