மாவட்டத்தில், மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று - 66 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
கரூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 66 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் தினமும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அசோக்நகரை சேர்ந்த 29 வயது பெண், 33 வயது வாலிபர், சங்கரம்பாளையத்தை சேர்ந்த 81 வயது மூதாட்டி, 47 வயது ஆண், சுருமன்பட்டியை சேர்ந்த 50 வயது பெண், 51 வயது ஆண், கோவிந்தம்மாள்நகரை சேர்ந்த 40 வயது பெண், 41 வயது ஆண், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 40 வயது பெண், 22 வயது வாலிபர், காந்தி கிராமத்தை சேர்ந்த 33 வயது வாலிபர், பெரியஆண்டாங்கோயிலை சேர்ந்த 33 வயது வாலிபர், லாலாபேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர், செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த 41 வயது பெண், வெங்கமேட்டை சேர்ந்த 66 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
மேலும் மார்க்கெட்டை சேர்ந்த 71 வயது முதியவர், புதுபட்டியை சேர்ந்த 25 வயது வாலிபர், குளித்தலையை சேர்ந்த 77 வயது முதியவர், பாலவிடுதியை சேர்ந்த 46 வயது ஆண், பெத்தாட்சிநகரை சேர்ந்த 36 வயது ஆண், புதுத்தெருவை சேர்ந்த 59 வயது ஆண், வைகைநல்லூரை சேர்ந்த 46 வயது பெண், அண்ணாநகரை சேர்ந்த 15 வயது சிறுமி, ரெங்கநாதபுரத்தை சேர்ந்த 54 வயது ஆண், பாரதிதாசன் நகரை சேர்ந்த 49 வயது பெண், காயத்திரிநகரை சேர்ந்த 52 வயது ஆண், ஓனவாய்க்கால்மேட்டை சேர்ந்த 73 வயது முதியவர் என மொத்தம் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 பேர் குணம் அடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 103 ஆண்கள், 68 பெண்கள், 2 குழந்தைகள் என 173 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், திருச்சியை சேர்ந்த 3 பேரும், மதுரையை சேர்ந்த 2 பேரும், ஈரோட்டை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், பொழுதுபோக்கிற்காகவும் தொலைக் காட்சி பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சித்த மருத்துவ பிரிவில் உள்ளவர்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுவதோடு, நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், பொழுதுபோக்கிற்காகவும் கேரம், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story