அரியலூர்-பெரம்பலூரில் மேலும் 84 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் மேலும் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கும், பெரம்பலூரில் 19 பேருக்கும் என மொத்தம் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 17 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 20 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்குபட்ட பகுதிகள், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தலா 3 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம், ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும் என மொத்தம் 65 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,497 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,106 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 364 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் தாலுகாவில் 2 பேருக்கும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் தாலுகாக்களில் தலா 7 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 3 பேருக்கும் என மொத்தம் 19 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 808 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 578 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 412 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story