மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா - சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு


மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா - சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 Aug 2020 3:15 AM IST (Updated: 13 Aug 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 30 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அதன்படி செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த 69 வயதுடைய முதியவர், வெங்கமேட்டை சேர்ந்த 50 வயது ஆண், ரெங்கசாமி நகரை சேர்ந்த 58 வயது ஆண், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 26 வயது பெண், வெங்கமேட்டை சேர்ந்த 63 வயது மூதாட்டி, புதுப்பட்டியை சேர்ந்த 52 வயது ஆண், மண்மங்கலத்தை சேர்ந்த 47 வயது பெண், காந்திகிராமத்தை சேர்ந்த 31 வயது ஆண், மணமங்கலத்தை சேர்ந்த 49 வயது ஆண், ரெங்கநாதம்பேட்டையை சேர்ந்த 38 வயது ஆண், புலியூரை சேர்ந்த 43 வயது ஆண்.

கே.ஆர்.புரத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ராஜா நகரை சேர்ந்த 43 வயது ஆண், கே.ஆர்.புரத்தை சேர்ந்த 61 வயது மூதாட்டி, தான்தோன்றிமலையை சேர்ந்த 62 வயது முதியவர், குளித்தலையை சேர்ந்த 59 வயது ஆண், பள்ளப்பட்டியை சேர்ந்த 64 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 54 வயது ஆண், 22 வயது வாலிபர் மற்றும் 57 வயது ஆண், தான்தோன்றிமலையை சேர்ந்த 40 வயது ஆண், வாங்கபாளையத்தை சேர்ந்த 45 வயது பெண், காந்திகிராமத்தை சேர்ந்த 55 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 40 வயது ஆண் உள்பட 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 பேர் பூரண குணமடைந்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு 13 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயதுடையவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இறந்ததால் தற்போது, சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Next Story