மதுரையில் கொரோனா பலி எண்ணிக்கை 300-ஐ கடந்தது


மதுரையில் கொரோனா பலி எண்ணிக்கை 300-ஐ கடந்தது
x
தினத்தந்தி 13 Aug 2020 3:45 AM IST (Updated: 13 Aug 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 300 -ஐ கடந்துள்ளது.

மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 113 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். மீதம் உ ள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 வாரமாக 150-க்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 71 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 169 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையில் நாளொன்றுக்கு சராசரியாக 3,800 முதல் 4,500 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மதுரையில் நேற்று 26 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11,054 ஆக அதிகரித்துள்ளது. 1009 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 48, 50, 60 வயது ஆண்கள், 65, 61, 72 வயது மூதாட்டிகள் என மொத்தம் 6 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர். மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.

Next Story