திருப்பத்தூருக்கு 24-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் வருகை - புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்


திருப்பத்தூருக்கு 24-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் வருகை - புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 13 Aug 2020 10:15 AM IST (Updated: 13 Aug 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூருக்கு வருகிற 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவர், புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கூடுதல் கலெக்டர் அலுவலகத்துக்கு தேவையான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட ஊரக முகமைக் கூடுதல் அரங்கு, வெளிப்புறத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் பெரிய அரங்கு என ரூ.5 கோடியே 73 லட்சத்தில் பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல் எலவம்பட்டி கிராமத்தில் ரூ.1 கோடியே 39 லட்சத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகன ஓட்டிகள் உரிமம் பெற 8 வடிவிலான தரை தளம் உள்ளிட்ட பணிகள், ரூ.1 கோடியே 44 லட்சத்தில் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் நீதிபதி மற்றும் சார்பு நீதிபதிக்கு வீடுகள், கதிரிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பணிகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப்பணிகள் ஆகிய வற்றை பொதுப் பணித் துறை செயற் பொறியாளர் சங்கர லிங்கம், கோட்ட பொறி யாளர் பழனி, உதவி பொறி யாளர் ரவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு கட்டிடங்கள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது, விரிசல் உள்ளதா, கழிவறையில் பயன்படுத்தப்பட்ட பொருட் கள் குறித்தும், மேல்தளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்வது குறித்தும், சுவர்களுக்கு வர்ணம் பூசுவது உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், மணிமேகலைசேகர், அஸ்வின், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 24-ந்தேதி கொரோனா தொற்று குறித்து ஆலோசனை மேற் கொள்ளவும், பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறார். எனவே அன்று தமிழக முதல்-அமைச்சர் அரசு புதிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார், என்றனர்.

Next Story