கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய ஊராட்சிமன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
சென்னையை அடுத்த பீர்க்கன்காரணை சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30). கட்டிட காண்டிராக்டர். இவர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு பகுதியில் தர்மசந்த் என்பவரின் நிலத்திற்கு சுவர் கட்டும் பணியை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் தொடுகாடு ஊராட்சிமன்ற தலைவரான வெங்கடேசன் (44) இங்கு வேலை செய்யவேண்டும் என்றால் தனக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கூறி உதயசங்கரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
கைது
மேலும் அவர், அங்கு பணி செய்யக்கூடாது என்று அங்கு இருந்த பணியாளர்களையும் மிரட்டி உள்ளார். இதை தட்டிக்கேட்ட உதயசங்கரை அவர், தன்னிடம் இருந்த கத்தியால் வெட்ட முயன்றார். உதயசங்கர் ஒதுங்கிக்கொண்டதால் கத்திக்குத்தில் இருந்து தப்பினார்.
பின்னர் அவர் உதயசங்கரை கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இது குறித்து உதயசங்கர் மப்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடுகாடு ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story