சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 தொழிலாளர்கள் காயம்


சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 தொழிலாளர்கள் காயம்
x
தினத்தந்தி 14 Aug 2020 3:30 AM IST (Updated: 14 Aug 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள அய்யனார்காலனியில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கேப்வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட அறைகளில் நேற்று வழக்கம் போல் கேப் வெடி உற்பத்தி நடைபெற்று வந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

இதற்கிடையில் ஆலையில் உள்ள ஒரு அறையில் கேப் வெடி வெட்டும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த பாண்டிராஜ் (வயது 38), நாரணாபுரத்தை சேர்ந்த ஜெயமுத்து (52) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. 

உடனே அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீப்பெட்டி, 

பட்டாசு ஆலை தனி தாசில்தார் லோகநாதன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story