தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 4:15 AM IST (Updated: 14 Aug 2020 8:05 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய அரசு பள்ளி ஆசிரியர் அண்மையில் பொள்ளாச்சிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் அவருக்கு சளி,காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல், தர்மபுரி தீயணைப்பு நிலைய குடியிருப்பு வளாகத்தை சேர்ந்த 28 வயது பெண், பிடமனேரியை சேர்ந்த 27 வயது தனியார் வங்கி ஊழியர், ஏரியூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் பணிபுரியும் 35 வயது ஊழியர், வி.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த 43 வயது சிக்கன் கடை ஊழியர், நகராட்சியில் டிரைவராக பணிபுரியும் 40 வயது நபர், கடகத்தூரை சேர்ந்த 56 வயது பூக்கடைக்காரர், பாலக்கோட்டை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மேலும் பாலக்கோட்டை சேர்ந்த 60 வயது காய்கறி வியாபாரி, மல்லுப்பட்டியை சேர்ந்த 22 வயது ஜவுளிக்கடை ஊழியர், பென்னாகரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஒட்டப்பட்டியை சேர்ந்த 8 வயது சிறுவன், தண்டுகாரண அள்ளியை சேர்ந்த 25 வயதுடைய பால் நிறுவன ஊழியர், தர்மபுரியில் செல்போன் கடை நடத்தி வரும் 28 வயது வாலிபர், மத்திகிரியில் இருந்து தர்மபுரி வந்த 56 வயது ஆண், பாப்பாரப்பட்டியை சேர்ந்த 47 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 16 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 919 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. நேற்று சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில் 32 வயது பெண், சின்னாளன்தொட்டியில் 23 வயது பெண், ஓசூரில் 36, 34 வயது பெண்கள், விகாஷ் நகரில் 45 வயது ஆண், கிருஷ்ணா நகரில் 10 வயது சிறுவன், 45, 53, 46, 21 வயது பெண்கள், 38 வயது ஆண், போச்சம்பள்ளி அத்திகானூரில் 61 வயது முதியவர், வேலுரைச் சேர்ந்த 37 வயது பெண் என நேற்று, 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,561 ஆக உயர்ந்துள்ளன.

Next Story