அரியலூரில், கொரோனாவுக்கு ஒருவர் பலி; 76 பேருக்கு தொற்று - பெரம்பலூரில் 31 பேர் பாதிப்பு


அரியலூரில், கொரோனாவுக்கு ஒருவர் பலி; 76 பேருக்கு தொற்று - பெரம்பலூரில் 31 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 4:00 AM IST (Updated: 14 Aug 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். மேலும் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதால், சாவு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,573 ஆக உயர்ந்துள்ளது. 1,156 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 361 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 12 பேருக்கும், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா 7 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 5 பேருக்கும் என மொத்தம் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 839 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 31 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 610 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 273 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story