திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 64 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,379-ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 64 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,379-ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 Aug 2020 11:46 AM IST (Updated: 14 Aug 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1379-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இந்நிலையில் நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி திருப்பூர் சின்னக்கரை சுப்பையா காம்பவுண்டு பகுதியை சேர்ந்த 50 வயது பெண், பல்லடம் அறிவொளிநகரை சேர்ந்த 23 வயது பெண், பல்லடம் அண்ணாநகரை சேர்ந்த 37 வயது ஆண், அருள்புரம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த 23 வயது பெண், மங்கலம் ரோடு எஸ்.ஆர்.நகரை சேர்ந்த 70 வயது பெண், முத்தணம்பாளையத்தை சேர்ந்த 53 வயது பெண், காந்திநகர் இ.பி.காலனியை சேர்ந்த 68 வயது பெண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 1 வயது குழந்தை, பாண்டியன்நகரை சேர்ந்த 9 வயது சிறுவன்.

கணபதிபாளையத்தை சேர்ந்த 60 வயது பெண், சந்திராபுரத்தை சேர்ந்த 67 வயது ஆண், உடுமலை வி.வி. லே அவுட்டை சேர்ந்த 66 வயது ஆண், அங்கேரிபாளையம் வெங்கமேட்டை சேர்ந்த 30 வயது பெண், பல்லடம் ரோடு தட்டான்தோட்டத்தை சேர்ந்த 24 வயது ஆண், பெருமாநல்லூரை சேர்ந்த 30 வயது பெண், கல்லூரி சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 65 வயது ஆண், குங்குமபாளையத்தை சேர்ந்த 70 வயது பெண், இந்திராநகரை சேர்ந்த 22 வயது பெண், கணபதிபாளையத்தை சேர்ந்த 22 வயது பெண், சாமுண்டிபுரத்தை சேர்ந்த 48 வயது ஆண், மங்கலம் ரோட்டை சேர்ந்த 55 வயது ஆண், செட்டிபாளையம் மகாலட்சுமிநகரை சேர்ந்த 33 வயது பெண், கட்டபொம்மன்நகரை சேர்ந்த 32 வயது பெண், காந்திநகர் ராஜப்பாதெருவை சேர்ந்த 19 வயது ஆண்.

உடுமலை செல்வபுரத்தை சேர்ந்த 48 வயது பெண், உடுமலை முருகன்நகரை சேர்ந்த 35 வயது ஆண், கணியாம்பூண்டியை சேர்ந்த 50 வயது ஆண், கருவலூரை சேர்ந்த 39 வயது ஆண், 38 வயது பெண், திருமுருகன்பூண்டியை சேர்ந்த கொசு ஒழிப்பு பணியாளரான 55 வயது பெண்.சத்யாநகரை சேர்ந்த 38 வயது ஆண், காங்கேயத்தை சேர்ந்த 20 வயது ஆண், 44 வயது பெண், திருப்பூர் என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்த 44 வயது ஆண், சாமிநாதபுரத்தை சேர்ந்த 47 வயது பெண், குறிஞ்சிநகரை சேர்ந்த 59 வயது ஆண், காங்கேயம் ரோட்டை சேர்ந்த 29 வயது பெண், கரட்டாங்காட்டை சேர்ந்த 53 வயது ஆண், 22 வயது பெண்.

தாராபுரம் கோவிந்தாபுரத்தை சேர்ந்த 34 வயது ஆண், காங்கேயம் அகிலாண்டபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண், வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த 54 வயது ஆண், ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், சுக்காண்டம்பாளையத்தை சேர்ந்த 29 வயது ஆண், திருப்பூர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 22 வயது ஆண், காங்கேயம் ரோட்டை சேர்ந்த 74 வயது ஆண், சிவசுப்பிரமணியன்நகரை சேர்ந்த 46 வயது ஆண், புஷ்பாநகரை சேர்ந்த 34 வயது ஆண், உடுமலை தளி ரோட்டை சேர்ந்த 54 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 53 வயது ஆண், திருப்பூர் கே.ஆர்.கே.நகரை சேர்ந்த 39 வயது ஆண், காங்கேயம்ரோட்டை சேர்ந்த 62 வயது பெண், 60 அடி ரோட்டை சேர்ந்த 25 வயது ஆண், காங்கேயம் ரோடு வி.ஜி.வி. கார்டனை சேர்ந்த 50 வயது ஆண், கல்லாம்பாளையத்தை சேர்ந்த 59 வயது ஆண்.

பலவஞ்சிபாளையத்தை 48 வயது ஆண், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த 26 வயது பெண், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 29 வயது ஆண், திருப்பூர் ராயல் தெருவை சேர்ந்த 30 வயது ஆண், காங்கேயம் அமர்ஜோதிநகரை சேர்ந்த 23 வயது ஆண், குமாரசாமி லே அவுட்டை சேர்ந்த 22 வயது ஆண், திருப்பூர் தோட்டத்தை சேர்ந்த 40 வயது ஆண், அங்கேரிபாளையம்ரோடு பகுதியை சேர்ந்த 70 வயது ஆண், எஸ்.வி. காலனியை சேர்ந்த 67 வயது ஆண் ஆகிய 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1379-ஆக உயர்ந்துள்ளது.

Next Story