திஷாவின் மரணம் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தந்தை போலீசில் புகார்
திஷாவின் மரணம் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார்.
மும்பை,
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன். இவர் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் ஜூன் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் சுஷாந்த் சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா். 2 பேரின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
வதந்தி பரப்புகின்றனர்
இந்தநிலையில் திஷா சாலியனின் தந்தை சதீஷ் மால்வானி போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர், “திஷா மற்றும் எங்கள் குடும்பத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பலர் அவரது மரணம் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். குறிப்பாக அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக கட்டுக்கதைகள் பரப்பப்படுகிறது. அதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து மால்வாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story