மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்


மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்
x
தினத்தந்தி 15 Aug 2020 6:39 AM IST (Updated: 15 Aug 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் தாலுகா கோவிந்தபுரத்தை சேர்ந்த பெரியகண்ணன் உள்பட 4 பேர், கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தனர். அவரது மனைவி சீதாலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் கோவிந்தபுரம் கிராமத்துக்கு சென்றார். அங்கு இறந்தவர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் லாரன்ஸ், செல்லம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் விஜயபாண்டியன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மகாராஜன், நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், நெல்லை மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், நெல்லை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிங்தேவேந்திரன், நெல்லை மாவட்ட இணை செயலாளர் துரைபாண்டியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரராஜ் கோவிந்தபுரம் கிராமத்துக்கு சென்றார். அங்கு நிலச்சரிவில் இறந்தவர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story