விளாத்திகுளத்தில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


விளாத்திகுளத்தில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2020 1:14 AM GMT (Updated: 15 Aug 2020 1:14 AM GMT)

விளாத்திகுளத்தில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் தலைமையிலான போலீசார் விளாத்திகுளம்- வேம்பார் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சந்தேகப்படும்படியான சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

புகையிலை பொருட்கள்பறிமுதல்

இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் இருந்து ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய 50 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பான்மசாலா பொருட்களை கடத்தி வந்ததாக கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ராஜன்னா மகன் மோகன் குமார் (வயது 30), மல்லிப்பட்டணத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா மகன் மஞ்சுநாதா (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story