திருச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு 5 பேர் பலி - புதிதாக 117 பேருக்கு தொற்று உறுதி


திருச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு 5 பேர் பலி - புதிதாக 117 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 Aug 2020 3:15 AM IST (Updated: 16 Aug 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். புதிதாக 117 பேருக்கு தொற்று உறுதியானது.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 55 வயது பெண் உயிரிழந்தார். ஆஸ்துமாவால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர், 50 வயது ஆண், 56 வயது ஆண் மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 59 வயது ஆண் என 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5,762 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 4,765 பேர், பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 912 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 41 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story