விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 305 பேருக்கு கொரோனா


விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 305 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Aug 2020 4:00 AM IST (Updated: 16 Aug 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,871 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 11,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 12,800 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் 9,280 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 5 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 468 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 700 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருத்தங்கலை சேர்ந்த 38 வயது நபர், மாரனேரி நடுத்தெருவை சேர்ந்த 58 வயது நபர், விஸ்வநத்தத்தை சேர்ந்த 25 வயது நபர், 65 வயது முதியவர், விசாலாட்சி காலனியை சேர்ந்த 27 வயது நபர், என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த 28 வயது பெண், மீனம்பட்டியை சேர்ந்த20 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த 27 வயது பெண், 8 வயது சிறுமி, கருப்பசாமிநகரை சேர்ந்த 30 வயது நபர், பேராலி ரோட்டில் உள்ள பாலிதீன் தொழிற்சாலையில் பணியாற்றும் 23, 52, 37, 35, 37, 40, 36 வயது நபர்கள், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 3 பேர், சூலக்கரையை சேர்ந்த 4 பேர், கட்டனூரை சேர்ந்த 3 பேர், சாத்தூர் பகுதியை சேர்ந்த 30 பேர், வத்திராயிருப்பை சேர்ந்த 10 பேர் உள்பட 305 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுவதில் தயக்கம் காட்டப்படும் நிலை உள்ளது.

மருத்துவபரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதிலும், இறப்பு எண்ணிக்கை தெரிவிப்பதிலும் வெளிப்படை தன்மை தேவை. இதே போன்று கிராமப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story