கொரோனாவில் இருந்து குணமடைந்த மந்திரி ஸ்ரீராமுலு வீடு திரும்பினார் தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்


கொரோனாவில் இருந்து குணமடைந்த மந்திரி ஸ்ரீராமுலு வீடு திரும்பினார் தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 Aug 2020 2:19 AM IST (Updated: 17 Aug 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து குணமடைந்த மந்திரி ஸ்ரீராமுலு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். அவரை தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஸ்ரீராமுலு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இதில் ஸ்ரீராமுலுவுக்கு கடந்த 9-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில், கொரோனா சிகிச்சைக்காக மந்திரி ஸ்ரீராமுலு சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அவர் அலுவலக கோப்புகளை பார்வையிட்டு வந்தார்.

8 நாட்கள் சிகிச்சை

இந்த நிலையில் மந்திரி ஸ்ரீராமுலுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. மேலும் அவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கமும் குறைந்து இருந்தது. இதனால் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

அப்போது அவரிடம் சில நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். மந்திரி ஸ்ரீராமுலுவின் சகோதரர், தாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மந்திரி ஸ்ரீராமுலு 8 நாட்கள் கொரோனாவுக்காக ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story