மாவட்டம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் - கலெக்டர் அறிவிப்பு


மாவட்டம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2020 9:45 PM GMT (Updated: 17 Aug 2020 2:58 AM GMT)

விருதுநகர் மாவட்டம் முழுவதும் இன்று முதல் 63 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக நடைமுறையில் இருக்கும் என கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் 108 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக இருந்த நிலையில் தற்போது 63 பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்னும் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கிராமப்பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு நடைமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவிக்கவில்லை.

கட்டுப்பாட்டு பகுதிகளை குறைத்துள்ளது நோய் தொற்று குறைந்துள்ளது என்பதை ஆதாரமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தாலும், இன்னும் சராசரியாக தினசரி மாவட்டத்தில் 200 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கவில்லை என்றாலும் கிராமப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

விருதுநகர் அருகே அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காகித ஆலையில் பணியாற்றும் 50 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாதது ஏன்? என தெரியவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை முடிவு செய்வதை பாதிப்பின் தீவிரத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ராஜபாளையம் தாலுகாவில் நூற்பாலையம் தெற்கு, அண்ணாநகர், இ.எஸ்.ஐ. காலனி, மாடசாமி கோவில்தெரு, சம்மந்தாபுரம், தென்றல்நகர், செட்டியார்பட்டி, இல்லத்துப்பிள்ளைமார்தெரு, திருவள்ளுவர்நகர், சோழபுரம், சங்கரலிங்காபுரம், ஆண்டாள்புரம் ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகம் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் முள்ளிகுளம், லட்சுமிபுரம் ஆகிய 2 பகுதிகள் மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி தாலுகாவில் விஸ்வநத்தம், காமராஜர் நகர், கொங்கலாபுரம், சித்துராஜபுரம், சரஸ்வதிபாளையம், அய்யனார்காலனி, எம்.துரைச்சாமிபுரம், விளாம்பட்டி, ஆசிரியர் காலனி, புதுஅம்மன்கோவில்பட்டி, ஆனையூர், ராஜதுரைநகர் ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு உள்ள சிவகாசி நகர் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகள் பட்டியலில் இருந்து முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை தாலுகாவில் டி.கான்சாபுரம், காக்கிவாடன்பட்டி, விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை, இ.டி.ரெட்டியபட்டி ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு தாலுகாவில் மகராஜபுரம், தம்பிப்பட்டி, வ.உ.சி.தெரு, கீழதெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் ஐ.சி.ஏ. காலனி, ராமமூர்த்தி ரோடு, கசாப்புகாரர்தெரு, பொம்மையாபுரம், மருளூத்து, சங்கரலிங்காபுரம், கூரைக்குண்டு, கோட்டைப்பட்டி ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி விருதுநகர் பகுதியில் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள என்.ஜி.ஓ. காலனி, கருப்பசாமி நகர், சூலக்கரை உள்ளிட்ட பகுதிகள் பட்டியலில் இடம் பெறாதது ஏன்? என்று தெரியவில்லை.

சாத்தூர் தாலுகாவில் சிந்தப்பள்ளி, நத்தத்துப்பட்டி ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை தாலுகாவில் சொக்கலிங்காபுரம், வேலாயுதம் பள்ளிக்கூட தெரு, தெற்குதெரு, அன்புநகர், சண்முகவேலன் தெரு, ராமலிங்கா மில் காலனி, லிங்காபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திப்பட்டி, பண்ணை மூன்றடைப்பு, எம்.ரெட்டியபட்டி, லட்சுமிபுரம், எம்.புதூர், மேலக்குரணை குளம், காளையார்கரிசல்குளம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி தாலுகாவில் கிழக்குதெரு, பச்சேரி, நாலூர், மறையூர், முள்ளிக்கொடி, மினாகுளம், எம்.கல்லுமடை, ஒட்டன்குளம் ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வணிக செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ள மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை அப்பகுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவினர் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story