மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம் + "||" + Near Thoothukudi The public The waiting struggle

தூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம்

தூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம்
தூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் 53-வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் கடந்த 9-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த சுகாதார பிரிவு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பெண்களிடம் அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பில் நேற்று காலையில் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி சுகாதார அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடந்தது.


இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து, புறநகர் செயலாளர் பா.ராஜா, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் மஜித், மாநகர துணை தலைவர் பிரபாகரன், தி.மு.க பிரசாந்த், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், ஒய்.எம்.ஜே. மாவட்ட நிர்வாகி காதர் கனி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் சகாயராஜ், செயலாளர் பிச்சையா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்த ஊழியரை தூய்மை காவலரை பணிநீக்கம் செய்வது, தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது, குற்றங்களுக்கு ஏற்றார் போல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அருகே பரபரப்பு: கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ - கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசம்
தூத்துக்குடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசமானது.
2. தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
3. தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
4. தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி
தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
5. தூத்துக்குடி அருகே, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றம்
தூத்துக்குடி அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலைமுயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.