தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சுகாதார மதிப்பீட்டுக்கான தரச்சான்றிதழ் - கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பணிபுரியும் இடத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீட்டுக்கான தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அலுவலகத்திற்கு வரும் வழியில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் சோப்பு கொண்டு கை கழுவுவதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் அலுவலக வாசலில் தானியங்கி கிருமி நாசினி எந்திரம், பொதுமக்கள் அனைவரும் கணினியுடன் இணைக்கப்பட்டு உள்ள தானியங்கி வெப்ப பரிசோதனை கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு உடல் வெப்பம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பார்வையாளர்களுக்கான இருக்கைகள் இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் தமிழக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் கார்த்திகேயன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மதிப்பீட்டாளர் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் முதன் முதலில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மூலம் பணிபுரியும் இடத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீடு தரசான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சான்றிதழை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தமிழக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார்.
தென்னிந்தியாவிலே தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இந்த சான்றிதழை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story