குற்றச்செயல்களை கண்டறிய வானில் வட்டமிட்டு கண்காணிக்க இருக்கும் 2 டிரோன்கள் - மத்திய ரெயில்வே வாங்கியது


குற்றச்செயல்களை கண்டறிய வானில் வட்டமிட்டு கண்காணிக்க இருக்கும் 2 டிரோன்கள் - மத்திய ரெயில்வே வாங்கியது
x
தினத்தந்தி 18 Aug 2020 5:44 AM IST (Updated: 18 Aug 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

குற்றச்செயல்களை கண்டறிய வானில் வட்டமிட்டு கண்காணிக்க 2 டிரோன்களை மத்திய ரெயில்வே வாங்கி உள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே சார்பில் 2 டிரோன்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த டிரோன்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கையாள உள்ளனர். ரெயில் நிலைய பகுதி, பணிமனை பகுதி போன்ற இடங்களில் வானில் பறக்க விட்டு ரெயில்வே சொத்துகளை பாதுகாக்கவும், சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகளை பிடிக்கவும் இந்த டிரோன்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயன்படுத்த உள்ளனர். இதுகுறித்து மத்திய ரெயில்வே தலைமை செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதார் கூறியதாவது:-

மத்திய ரெயில்வேயின் ‘வானின் கண்’ ஆக இந்த டிரோன்கள் செயல்படும். 2 கி.மீ. வரையில் வட்டமிடும் இந்த டிரோன்கள் 25 நிமிடங்கள் பறக்கக்கூடியது. இவற்றை இயக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் டிரோன்களை பறக்கவிட சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து உரிய லைசென்ஸ் பெறப்பட்டு உள்ளது.

சிக்கலான சூழ்நிலைகளில் ரெயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கும், பேரிடர் நிகழ்விடங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும், ரெயில்வே சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களை கண்டுபிடிக்கவும், இக்கட்டான மற்றும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கண்காணித்து குற்றவாளிகளை பிடிக்கவும் இந்த டிரோன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story