தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர்கள் உள்பட 33 பேருக்கு கொரோனா
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று ஆசிரியர்கள் உள்பட 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி,
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்த 42 வயது அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் 40 வயது தனியார் பள்ளி ஆசிரியை ஆகியோருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 48 வயது ஊழியர், பாலக்கோட்டில் பணிபுரியும் 45 வயது போலீஸ் ஏட்டு, அரூரை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இண்டூரை சேர்ந்த 17 வயது மாணவி, தர்மபுரியை சேர்ந்த 53 வயது நகராட்சி பெண் தொழிலாளி, இண்டூரை சேர்ந்த 45 வயது மின்வாரிய ஒப்பந்ததாரர் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 1000-த்தை கடந்தது. இதுவரை மொத்தம் 1006 பேர் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று சற்று குறைந்து 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன்படி, ஓசூர் பகுதியில் 5 ஆண்கள், 13, 15 வயது சிறுமிகள் உள்பட 4 பெண்கள் என 9 பேருக்கும், காவேரிப்பட்டணம் பகுதியில் 3 ஆண்களுக்கும், கிருஷ்ணகிரி மற்றும் பெரியாம்பட்டி பகுதியில் தலா ஒரு ஆணுக்கும் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story