ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தல்: வெங்காயம் ஏற்றி வந்த மினிவேனில் ரூ.1½ கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வெங்காயம் ஏற்றி வந்த மினி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி மினிவேன் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினிவேனை தடுத்து நிறுத்த முயன்ற போது, சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றுவிட்டது.
இதைத்தொடர்ந்து தப்பிச்சென்ற மினிவேனை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அதன் பின்னர், போலீசார் மினி வேனை திறந்து உள்ளே சோதனை செய்து பார்த்தனர். அப்போது, அதில் வெங்காய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அந்த மூட்டைகளை புரட்டி எடுத்து கலைத்து பார்த்தபோது, அடியில் சுமார் 9 மூட்டைகளில் 600 கிலோ மதிப்பிலான கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக மினிவேனில் கஞ்சா கடத்தி வந்த மதுரை மாவட்டம் தலைவிரிச்சான் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 28), அருண் பாண்டி (31), சென்னை புரசைவாக்கம் நாராயணன் முதலி 2-வது தெருவைச் சேர்ந்த பாபு (49) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்னைக்கு கொண்டு வந்து, பின்னர் இங்கு பிரித்து பொட்டலங்களாக மாற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய இடங்களுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.
அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் ஆகியோருக்கு ரகசியமாக விற்று வருவதையும் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர்புடைய கும்பலை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
சமீபகாலமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வேன்கள் மற்றும் கன்டெய்னர் லாரிகள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் புழக்கம் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story