மேடை அமைக்கும் பணி தீவிரம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வேலூர் வருகை பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வேலூர் வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வேலூர்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அந்த மாவட்டத்தில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். தொடர்ந்து அந்த மாவட்டத்தில் காணப்படும் கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குகிறார்.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இதற்காக முதல்-அமைச்சர் நாளை காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்படுகிறார். வரும் வழியில் ரத்தினகிரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.30 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் வருகிறார்.
முதல் நிகழ்ச்சியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்கிறார். அத்துடன் புதிய பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் 5-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் நடைபெறுகிறது. இதில், கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன்அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 8 அரசுத்துறைகளை சேர்ந்த 60 அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
அதைத்தொடர்ந்து 3 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தொற்று பரவலை கட்டுப்படுத்த செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்கிறார். இதில், கலெக்டர்கள், மருத்துவபணிகள் இணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள், அலோபதி, சித்த, ஆயுர்வேத டாக்டர்கள், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
பின்னர் சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மகளிர் திட்டம் மூலம் செயல்படும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், வணிகர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடுகள், கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிகிறார். தொடர்ந்து 2-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் விவசாய சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் காணப்படும் விவசாய பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து அறிந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியின் நிறைவாக பகல் 1 மணியளவில் மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் நிருபர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் அவர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுகிறார். அங்கிருந்து பிற்பகல் 2 மணியளவில் தர்மபுரிக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வர்ணம் பூசுதல், கூட்டரங்குகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகள் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைய உள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100 பேர் அமரும் வகையில் தகர ஷீட்டுகளால் மேடை அமைக்கும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது.
இதனை வேலூர் மாவட்ட பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையிட்டு சரியான முறையில் பணிகள் நடைபெறுகிறதா? என்று கண்காணித்தனர். முதல்-அமைச்சர் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் கூட்டரங்குகள், மேடை ஆகியவற்றை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், மேடை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார், மயில்வாகனன், விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குறிப்பாக முதல்-அமைச்சர் காரில் வரும் சென்னை-பெங்களுரு சாலையோரம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் இன்று மாலை முதல் நாளை மாலை வரை ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையினர் இன்று காலை வேலூருக்கு வருகை தர உள்ளனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதற்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story