பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்களின் 4 மோட்டார் சைக்கிள்களை மர்மஆசாமிகள் தீவைத்து சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 155-வது பிளாக்கில் வசித்து வரும் அருண்(வயது 27), எட்வர்ட் ரீகன்(37), அனிதா(30), கோபி(23) ஆகியோர் தங்களுடைய மோட்டார் சைக்கிள் களை அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நிறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள் எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையறிந்த உடனே பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள், 4 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் எதுவும் வரவில்லை.
இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் இதே அடுக்கு மாடி குடியிருப்பின் 113-வது பிளாக்கிற்கு வெளியே நிறுத்தி இருந்த 7 மோட்டார் சைக்கிள் களை மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்று இருந்தனர். தற்போது 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story