முகநூலில் வெறுப்பை பரப்புவோர் மீது நடவடிக்கை சிவசேனா வலியுறுத்தல்


முகநூலில் வெறுப்பை பரப்புவோர் மீது நடவடிக்கை சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Aug 2020 5:42 AM IST (Updated: 19 Aug 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

முகநூலில் வெறுப்பை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

பா.ஜனதா தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் கண்டுகொள்வதில்லை என வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில் முகநூலில் வெறுப்பை பரப்பும் வகையிலும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்கள் மீதும் கட்சி பாகுபாடியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மேலும் இதுகுறித்து அந்த கட்சி கூறியிருப்பதாவது:-

முகநூலில் விவாதங்கள் நடப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நாடு, சமூக ஒற்றுமைக்கு எதிராகவும், வெறுப்பை பரப்புவோர் மீதும் கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முகநூல் போன்ற நிறுவனங்கள் வெறுக்கத்தக்க கருத்துகளை பதிவிடும் ஒருவர் ஆளுங்கட்சியை சோ்ந்தவர் என்பதற்காக அவரை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது. நீங்கள் (முகநூல்) தொழில் செய்ய எங்கள் நாட்டுக்கு வந்து உள்ளீர்கள். ஆனால் குறைந்தபட்ச தொழில் தர்மம், விதிகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story