தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற புதிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.
தூத்துக்குடி,
தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையமான w ww.tnprivatejobs.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார்.
தனியார் துறை நிறுவனங்களில் வேலை பெற விரும்பும் வேலை தேடுபவர்கள் தங்களது விவரத்தை எந்தவித கட்டணமும் இன்றி பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.
அதேபோன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு தங்களின் நிறுவனங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடுபவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொண்டு தனியார் நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பை பெறலாம். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் பணிபெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.
8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி தகுதியுடையவர்களும் இந்த இணையத்தில் இலவசமாக பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story