நில அளவையர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட 16 பேருக்கு பணி நியமன ஆணை
தூத்துக்குடி மாவட்டத்தில் நில அளவையர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட 16 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நில அளவையர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, 16 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நில அளவர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். நில அளவையராக பணியாற்றுவது மிக முக்கியமான பணி ஆகும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை வீடு மற்றும் நிலங்களை நில அளவை செய்து பட்டா மாறுதல் மற்றும் பட்டா வேண்டுவது போன்றவையாகும். உங்களது பணி மிகவும் பொதுமக்களுக்கு தேவையான முக்கியமான பணி ஆகும். எனவே உங்களது பணியை சிறப்பாக செய்து ஏழை, எளிய மக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் திரவியசாமி, கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி, ஆய்வாளர் மனோகரன் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நில அளவையர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story