பெண் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுப்பு: ஊராட்சி மன்ற செயலாளர் பணியிடை நீக்கம்
சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஊராட்சி மன்ற செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்வேணு (வயது 60) என்பவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தன் பெயரை இதுவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுதவில்லை என்றும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில்தேசியக்கொடியை ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
தனக்கான உரிமை, அதிகாரம் இல்லாதபடி ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து தன்னை புறக்கணித்து வருவதாகவும், தலைவர் பதவிக்கு தேர்வாகி 9 மாதங்கள் ஆகியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாவி, பீரோ சாவி, கணக்கு வழக்கு கள் ஆகியவற்றை இதுவரை தன்னிடம் தராமல் ஊராட்சி மன்ற செயலாளரே வைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூட்டம் முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடைபெற்றது என்பதை கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் நடைபெற காரணமான ஊராட்சி செயலாளர் சசிகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளோம். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகம் வரவழைத்துள்ளேன். அவரிடம் மேலும் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும். மேலும் இந்த பஞ்சாயத்து மட்டுமல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் வேறு எந்த பஞ்சாயத்திலும் இப்படிப்பட்ட சம்பவம் நடக் காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Tags :
Next Story