பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: கோவையில் கொரோனாவுக்கு - ஒரே நாளில் 16 பேர் பலி; புதிதாக 394 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கோவை,
சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் ஏழை, பணக்காரன் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி கோர தாண்டவம் ஆடி வருகிறது.
தமிழகத்திலும் கொ ரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கடந்த மே மாதத்துக்கு பின்னர் இந்த தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொ ரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தியது.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் இந்த பெருந்தொற்று நேற்று புதிய உச்சத்தை தொட்டது.
அதாவது தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,785 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சென்னையில் 1186 பேருக்கு தொற்று உறுதியானது. 16 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். அதற்கு இணையாக கோவையிலும் நேற்று ஒரே நாளில் 16 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவே மாவட்டத்தின் அதிகபட்சமாகும்.
கோவையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 47 வயது ஆண், 62 வயது பெண், 56 வயது ஆண், 55 வயது ஆண், 65 வயது பெண், 43 வயது ஆண், 36 வயது பெண், 86 வயது மூதாட்டி, 76 வயது ஆண், 71 வயது ஆண், 48 வயது ஆண், 70 வயது பெண் உள்பட 10 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 16 பேர் நேற்று பலியானார்கள்.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது. கோவை காரமடை அருகே உள்ள தனியார் தொழிற் சாலை மேலாளருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. எனவே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த ஊழியர்களை பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 28 வயது அரசு பள்ளி ஆசிரியர், ஆண் காவலர்கள் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் தவிர செல்வபுரத்தை சேர்ந்த 29 பேர், போத்தனூரை சேர்ந்த 19 பேர், ரத்தினபுரியை சேர்ந்த 15 பேர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 14 பேர், சூலூரை சேர்ந்த 13 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 10 பேர், காரமடையை சேர்ந்த 20 பேர் உள்பட நேற்று ஒரேநாளில் மொத்தம் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,158 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மே மாத இறுதியில் 146 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து விட்டது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 1,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச் சை பெற்ற 286 பேர் நேற்று ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 2,720 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து விட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story