18 ரேஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்கக்கோரி முகமூடி அணிந்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
18 ரேஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்கக்கோரி முகமூடிஅணிந்து கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
வீரபாண்டி,
வீரபாண்டி குப்பாண்டபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் நிர்வாகத்தின் கீழ் 18 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகள் மாநகராட்சியின் 6 வார்டுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் நடைபெறும் 18 ரேஷன் கடைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டதாகவும், அதனை அதிகாரிகள் உதவியுடன் மறைக்க முயற்சி செய்வதாகவும், பொதுமக்களுக்கு பொருட்கள் சரியாக வழங்குவது இல்லை என்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
எனவே பொதுமக்களுக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்கக்கோரியும், ரேஷன் கடையில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கக்கோரியும் இந்தியகம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்குப்பாண்டம்பாளையம்கூட்டுறவு வங்கி முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர். இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய இந்திய கம்யூனிஸ்டு அருணாச்சலம் கூறும்போது “அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்கள் சரியான அளவில் வழங்குவது இல்லை.
இது குறித்து சங்கத் தலைவர் மற்றும் செயலாளரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மக்களை ஒன்று திரட்டி மிகப் பெரும் போராட்டமாக நடத்தப்படும்” என்றார்.
Related Tags :
Next Story