நினைவு தினத்தையொட்டி ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு
நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை,
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 249-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள ஒண்டிவீரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி, ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஷில்பா, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், நெல்லை ஆவின் தலைவர் சுதா பரமசிவன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் மகராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன் கட்சி நிர்வாகிகள் கணேஷ்குமார், சுரேஷ்குமார் உள்பட பலர் வந்து இருந்தனர்.
நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம் தலைமையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. செய்தி தொடர்பாளர் முத்துவளவன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.சி. கார்த்திக் உள்பட பலர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
ஆதித்தமிழர் பேரவை நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைப்பொதுச்செயலாளர் அருந்ததி அரசு, இலக்கியன், மாணிக்கம், மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜக்கையன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அமைப்பு செயலாளர் திலிபன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழ்ப்புலிகள் அமைப்பின் நெல்லை மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் பாலமுருகன், மாசிலாமணி, சரவணன், பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story