லாலாபேட்டை அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு


லாலாபேட்டை அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Aug 2020 5:25 AM IST (Updated: 21 Aug 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அருகே தகராறில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லாலாபேட்டை,

லாலாபேட்டை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம்(வயது 64). இவருடைய வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில், நேற்று முன்தினம் மாலை கழிவுகளை பொட்டலமாக கட்டி வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொன்னம்பலம் குடும்பத்திற்கும், அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தி(45) குடும்பத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் சாந்தியின் மருமகன் குப்புரெட்டிபட்டியை சேர்ந்த வெங்கடேஷ், அரிவாளால் பொன்னம்பலத்தின் உறவினர்களான சரவணன், அவரது மனைவி நாகலட்சுமியை வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

2 பேர் மீது வழக்கு

இது குறித்து பொன்னம்பலம் கொடுத்த புகாரின்பேரில் சாந்தி, வெங்கடேஷ் ஆகியோர் மீது லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story