நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை மும்பை போலீசார் தொடர்ந்து விசாரிப்பார்கள் சிவசேனா மந்திரி அனில் பரப் கூறுகிறார்
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை மும்பை போலீசாரும் தொடர்ந்து விசாரிப்பார்கள் என்று மந்திரி அனில் பரப் கூறினார்.
மும்பை,
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில் பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரிப்பதில் யாருக்கு உரிமை என்பதில் மராட்டியம்-பீகார் மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் பீகார் அரசு செய்த சிபாரிசை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து மந்திரி அனில் பரப் கூறியதாவது:-
சுஷாந்த் சிங் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டாலும், மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள். இதுவரை மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு குற்றம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. குற்ற சம்பவம் நடந்தது எங்களது எல்லைக்கு உட்பட்டதால், நமது மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.
சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது முக்கியம். எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையில் அரசியல் செய்கின்றன. இந்த வழக்கில் உண்மையை மறைக்க அரசு எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த பிரச்சினை குறித்து சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
மும்பை போலீசார் மற்றும் மராட்டிய அரசின் புகழை கெடுப்பதற்காக சுஷாந்த் சிங் வழக்கில் அரசியல் செய்யப்படுகிறது. பாட்னா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது சரி என்று வைத்து கொண்டால், இதே வழக்கில் தொடர்புடைய வேறு ஒருவர் மேற்கு வங்க மாநில போலீசில் புகார் அளிக்கும் பட்சத்தில் கொல்கத்தா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த அதிகாரம் உண்டா?
மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் எந்த தவறையும் காண முடியாத நிலையில் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. பீகாரில் பல வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அதில் எத்தனை குற்றவாளிகளை சி.பி.ஐ. கைது செய்து விட்டது?. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story