தர்மபுரியில், 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.85 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் வழங்கினார்
தர்மபுரியில் நடந்த விழாவில் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.85 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் புதிய திட்டங்கள் தொடக்க விழா, முடிவுற்ற பணிகள் தொடக்கவிழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மலர்விழி வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.கோவிந்தசாமி, வி.சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஊரக வளர்ச்சி துறை மூலம் ஒரு உயர்மட்ட பாலம், 8 அங்கன்வாடி மையங்கள், பொதுசுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை மூலம் 2 அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடங்கள், 3 துணை சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு மற்றும் கூடுதல் கட்டிடங்கள் 3 துணை சுகாதார நிலையங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறுகள், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உடைமாற்றும் அறை குளியலறை, கழிப்பறை வளாகம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் ஆய்வகங்கள், கழிப்பிடங்கள், சுற்றுச்சுவர் குடிநீர் மற்றும் மின்வசதி என மொத்தம் ரூ.15 கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான 20 முடிவுற்ற பணி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
புதிய பணிகளுக்கு அடிக்கல்
இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம் 9 சமுதாய கூடங்கள், 9 உணவு அருந்தும் கூடங்கள், 13 புதிய பள்ளி கட்டிடங்கள், 18 இணைப்பு சாலைகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 58 தொகுப்பு வீடுகள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் ஆய்வகம், கழிப்பிடங்கள், சுற்றுச்சுவர் குடிநீர், பொதுசுகாதாரத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர சிகிச்சை வார்டு கட்டிடம் என ரூ.69 கோடியே 89 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் 117 புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நலத்திட்ட உதவிகள்
இதைத்தொடர்ந்து ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தாட்கோ, பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல் துறை கூட்டுறவுத்துறை மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் 13,999 பயனாளிகளுக்கு ரூ.85 கோடியே 17 லட்சத்து 84 ஆயிரத்து 452 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த விழாவில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாநில இணை செயலாளர் கே.பி.ஆனந்த், மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் கே.வி.ரெங்கநாதன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சி.கோபால், எம்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், பி.என்.பெரியண்ணன், ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், பாஞ்சாலை கோபால், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் ஜோதி பழனிசாமி, பொன்னுவேல், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் முனிராஜ், ஜே.ஆர்.சிவசக்தி, கவிதா முருகன், ராஜ்குமார், ஹரியா அர்ச்சுனன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் முனியம்மாள் மாது, கே.பி.மோகன், சரண்யா சண்முகம், ஆர்.வீரம்மாள், எஸ்.செல்வன், சி.கந்தர், கூட்டுறவு சங்க தலைவர்கள் முனியன், அங்குராஜ், மகாலிங்கம், ஜி.மதிவாணன், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி முத்து, அதியமான்கோட்டை கிளை செயலாளர் பிரேம்குமார் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story