தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் அரசின் கொள்கை முடிவு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்ட வட்டம்
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் அரசின் கொள்கை முடிவு என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
மொடக்குறிச்சி,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கணபதிபாளையம் ஊராட்சியில் ரூ.13 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையம் சோதனை ஓட்ட தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
மின் கட்டணம்
இதைத்தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டு என்பது இருந்தது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்றபோது 2 மாதத்தில் மின்வெட்டு என்பது இல்லா மாநிலமாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 112 துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் தொடங்கப்பட்டு உள்ள துணை மின் நிலையம் 1 மாத காலத்துக்கு சோதனை ஓட்டமாக செயல்படும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த பிறகு துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார். மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதுபற்றி முதல்- அமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தக்க முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு மொழி கொள்கை
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு. அது தான் எங்கள் லட்சிய பயணம். மேலும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் அறிவொளி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் உருவாக்கப்படும் பணிகளில் இட மாறுதல்களில் புரிந்துணர்வின் அடிப்படையில் பணியிட மாறுதல் பெற்றுக்கொள்ளலாம். தனியார் பள்ளிக்கூடங்களை விட இந்த ஆண்டு அதிக அளவில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ச.பாலகிருஷ்ணன், ஆர்.என்.கிட்டுசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், ஒன்றியக்குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் மயில் என்கிற சுப்பிரமணி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ஆர்.பி.கதிர்வேல் (மொடக்குறிச்சி), கலைமணி (கொடுமுடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சுசீலா, ஒன்றியகுழு உறுப்பினர் என்.ஆர்.நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story