கிறிஸ்தவ மகளிர் குழுவினர் தொழில் தொடங்க ரூ.6½ லட்சம் நிதியுதவி அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க ரூ.6½ லட்சம் கடனுதவியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் கிறிஸ்தவ மகளிர் குழுக்களுக்கு தொழில் தொடங்க உதவி தொகை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது.
விழாவில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கிறிஸ்தவ மகளிர் குழுக்களைச் சேர்ந்த 41 பேருக்கு ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ரூ.20 லட்சம் மானியம்
சிறுபான்மையினர் தொழில் முனைவோராக உருவாகும் வகையில் அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்காக அரசு ரூ.20 லட்சம் மானியமாக வழங்கியது. இந்த ஆண்டு தற்போது 41 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, சிவகங்கை, ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story