தவசிலிங்கசாமி கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காப்புகட்டி விரதம் தொடங்கினார்


தவசிலிங்கசாமி கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காப்புகட்டி விரதம் தொடங்கினார்
x
தினத்தந்தி 21 Aug 2020 2:29 AM GMT (Updated: 21 Aug 2020 2:29 AM GMT)

தவசிலிங்கசாமி கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காப்புகட்டி விரதம் தொடங்கினார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் மூளிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஸ்ரீ தவசிலிங்க சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் முடிவடைந்து மகாகும்பாபிஷேகம் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று காப்பு கட்டி விரதம் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சிற்பி கருப்பசாமி, கோவில் தலைவர் செல்லசாமி, மூளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதிராஜா, விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தர்மலிங்கம், கோவில் பொருளாளர் கனியப்பன், அறங்காவலர் குழு உறுப்பினர் வேலாயுதம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர், கோவி நிர்வாகி அழகர்சாமி, திருத்தங்கல் அம்மா பேரவை செயலாளர் ரமணா, சிவகாசி நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story