நெல்லை, தூத்துக்குடியில் 290 பேருக்கு கொரோனா தென்காசியில் 112 பேர் பாதிப்பு


நெல்லை, தூத்துக்குடியில் 290 பேருக்கு கொரோனா தென்காசியில் 112 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2020 3:45 AM IST (Updated: 22 Aug 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று 290 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. தென்காசியில் 112 பேர் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 74 பேர் ஆவர். மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர், முன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நர்சு, கூடங்குளம் அணுமின் நிலைய குடியிப்பை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,198 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 125 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதில் 57 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள்.

தென்காசி மாவட்டத்தில் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், தென்காசி, கடையம், கீழப்பாவூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளை சுற்றி சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,473 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 422-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 690 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 637 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story