தேவை அதிகமாக இருந்தாலும் கர்நாடகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை - மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரின் தேவை அதிகமாக இருந்தாலும், தட்டுப்பாடு இல்லை என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு கிம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு அரசு காரணமில்லை. ஆஸ்பத்திரி நிர்வாகம் சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக அரசுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக, அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட 23 நோயாளிகள் பாதுகாப்பான முறையில் விக்டோரியா, பவுரிங் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற ஆஸ்பத்திரிகளில் இருந்து கிம்சுக்கு உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பவும் உத்தரவிட்டேன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல், மாநிலத்தில் சிலிண்டர் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அரசின் அலட்சியமே காரணம் என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவர் ஒரு மூத்த தலைவர், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையாக இருக்கிறதா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். இந்த விஷயத்தை அரசியலாக்க நினைக்க கூடாது. எதிர்க்கட்சி என்பதால் அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டு கூற வேண்டும் என்று ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையாக இருப்பதாக மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிக்க கூடாது.
தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால், மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரின் தேவை, இதற்கு முன்பு இருந்ததை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் மாநிலத்தில் எந்த ஒரு நோயாளியும் பரிதவிக்கவில்லை. கொரோனா காரணமாக 2½ லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மற்ற நோயாளிகளுக்கும் எந்த விதமான பிரச்சினையும் இன்றி அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் சிலிண்டரின் தேவை அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, வாங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா நோயாளிகள் உள்பட பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாலும், ஆக்சிஜன் சிலிண்டரின் தேவை அதிகமாக இருந்தாலும், மாநிலத்தில் எந்த ஒரு ஆஸ்பத்திரிகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிலிண்டர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்ததும், மாநிலத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை குறித்து கணக்கிட்டு, அரசுக்கு தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story