நாகை அருகே பரிதாபம்: தொட்டிலில் விளையாடியபோது கழுத்தை சேலை இறுக்கியதில் மாணவி சாவு


நாகை அருகே பரிதாபம்: தொட்டிலில் விளையாடியபோது கழுத்தை சேலை இறுக்கியதில் மாணவி சாவு
x
தினத்தந்தி 22 Aug 2020 5:22 AM IST (Updated: 22 Aug 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே தொட்டிலில் விளையாடியபோது கழுத்தில் சேலை இறுக்கியதில் 7-ம் வகுப்பு மாணவி இறந்தாள்.

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 45). சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மகள் அனுசியா(12). 7-ம் வகுப்பு மாணவியான அனுசியா, சம்பவத்தன்று தனது வீட்டின் உத்திரத்தின் மீது சேலை துணியால் தொட்டில் கட்டி அதில் விளையாடினாள். அப்போது சேலை துணி திடீரென சுழன்றதில் அவளது கழுத்தை சேலை இறுக்கியது. இதனால் மூச்சுத்திணறிய அனுசியா மயக்கமடைந்து கீே-ழு விழுந்தாள்.

பரிதாப சாவு

உடனே அவளது குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனுசியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொட்டிலில் விளையாடியபோது கழுத்தை சேலை இறுக்கியதில் மாணவி ஒருவர் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story