செங்கல்பட்டு மாவட்டத்தில் வேகமெடுக்கும் கொரோனா: ஒரே நாளில் தொற்றுக்கு 430 பேர் பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்குகிறது


செங்கல்பட்டு மாவட்டத்தில் வேகமெடுக்கும் கொரோனா: ஒரே நாளில் தொற்றுக்கு 430 பேர் பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 22 Aug 2020 7:09 AM IST (Updated: 22 Aug 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 430 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். கொரோனா தொற்று வேகமெடுக்கும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்குகிறது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம், ஓட்டேரி, மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதியில் வசிக்கும் 36 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம் எஸ்.எஸ்.எம்.நகர் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டி, 51 வயது ஆண், ரத்தினமங்கலம், கண்டிகை பகுதிகை சேர்ந்த 7 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வடமேல்பாக் கம் கிராமத்தை சேர்ந்த 18 வயது வாலிபர், கீழக்கரணை பஜனை கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 737 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 31 ஆக உள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 413 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத்தொடர்ந்து, மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 418 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 51 வயது ஆண், 27 வயது வாலிபர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 23, 21, 23 மற்றும் 25, வயதுடைய வாலிபர்கள், வரதராஜபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 369 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 756 ஆக உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 467 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 923 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story