கொரோனா நோய் தடுப்பு மருந்து பெட்டகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கொரோனா நோய் தடுப்பு மருந்து பெட்டகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 22 Aug 2020 11:00 PM GMT (Updated: 22 Aug 2020 6:21 PM GMT)

கோவில்பட்டி நகராட்சி ஸ்ரீராம் நகர் நல வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு மருந்து பெட்டகம் வழங்கும் பணிகள் நேற்று நடந்தது.

கோவில்பட்டி,

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு செவிலியர்களிடம் கொரோனா நோய் தடுப்பு மருந்து பெட்டகத்தினை வழங்கி கோவில்பட்டி பகுதியில் மருந்து பெட்டகம் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கடலையூரில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற 34 தியாகிகள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூணுக்கு அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ரூ.9 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் நினைவு இல்லத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து மறைந்த பாரதி ஆய்வாளர் இளசை மணியன் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உதவி கலெக்டர் விஜயா, கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன், மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி சீனிவாசன், பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி, எட்டயபுரம் தாசில்தார் அழகர், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிமுத்து பாண்டியன், வார்டு செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story