மேலும் 520 பேருக்கு தொற்று: ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு பலி சாவு எண்ணிக்கை 151 ஆனது
புதுவையில் கொரோனா தொற்றால் மேலும் 520 பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 8 பேர் பலியாகினர். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1,318 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒரே நாளில் 8 பேர் பலியாகி உள்ளனர். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் வீராம்பட்டினத்தை சேர்ந்த 60 வயது முதியவரும், புதுவை ஆனந்தரங்கப்பிள்ளை வீதியை சேர்ந்த 84 வயது முதியவர், லாஸ்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த 38 வயது ஆண், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த 59 வயது ஆண், திருக்கனூர் காந்திநகரை சேர்ந்த 64 வயது ஆண் ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் 70 வயது மூதாட்டியும், காரைக்கால் பட்டினச்சேரியை சேர்ந்த 52 வயது ஆண் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்து உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 62 ஆயிரத்து 413 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களில் 50 ஆயிரத்து 769 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 654 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,649 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 5 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 ஆயிரத்து 307 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சாவு எண்ணிக்கையும் 151 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 127 பேரும், காரைக்காலில் 9 பேரும், ஏனாமில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவோர் விகிதம் 62.37 சதவீதமாகவும் உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story